சிங்கப்பூருக்கு இடைவிடாத விமான சேவை; கோ ஏர் நிறுவனம் அறிமுகம்..!!

Go Air Non-stop flights to Singapore

Go Air விமான நிறுவனத்தின் இடைவிடாத விமான சேவையை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெறலாம், என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு மற்றும் கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு இடைவிடாத விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது கோ ஏர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு டெல்லி, சண்டிகர், லக்னோ மற்றும் அகமதாபாத், கொல்கத்தா மற்றும் லக்னோ, கொல்கத்தா மற்றும் கெளஹாத்தி, சண்டிகர் மற்றும் அகமதாபாத் இடையே இடைவிடாத விமான சேவைகளையும் தொடங்கியுள்ளது.

கோ ஏர், விமான சேவையை பெங்களூரு-சிங்கப்பூர்-பெங்களூரு வழித் தடத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கும். இதன் கமர்ஷியல் ஆபரேஷன் அக்டோபர் 18, 2019 அன்று தொடங்கும்.

கொல்கத்தா-சிங்கப்பூர்-கொல்கத்தா பாதையில் விமான சேவையை, வாரத்தில் மூன்று நாட்கள் நடத்துகிறது கோ ஏர்.

வரும் அக்டோபர் 19 முதல் இந்த விமானம், வணிக நடவடிக்கைகளைத் தொடங்கும். சிங்கப்பூரில், கோ ஏர் 8-வது சர்வதேச இடத்தில் இருக்கிறது. மிசோராமில் உள்ள ஐஸ்வாலில் 25-வது இடம்.

விமான எண் 6827 பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (பி.எல்.ஆர்) இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை அதிகாலை 3.20 மணிக்கு அடையும். திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் சேவையைப் பெறலாம்.

இதற்கான கட்டண விவரங்களை கோ ஏர் இணையதளத்தில் பார்க்கவும்.