சிங்கப்பூரில் இருந்து சென்னை பறந்த குருவி – டாய்லெட்டில்1 கிலோ தங்கம் அனாமத்தாய் போனது எப்படி?

who came to Chennai from Singapore was arrested

சிங்­கப்­பூ­ரில் இருந்து சென்னை வந்த விமா­னத்­தில் ரூ.46 லட்­சம் மதிப்பு உள்ள தங்­கம் கடத்தி வரப்பட்டதை அதி­கா­ரி­கள் கண்டு பிடித்­துள்­ள­னர்.

சென்னை மீனம்பாக்­கம் விமான நிலை­யத்­தின் வழி­யாக கடத்­தல் தங்கம் கொண்டு வரப்­ப­டு­வ­தாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரக­சிய தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து சுங்க இலாகா அதி­கா­ரி­கள் விமா­னப் பய­ணி­களை தீவி­ர­மா­கக் கண்­கா­ணித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து சென்னை வந்து இறங்­கிய விமா­னத்­தில் பய­ணம் செய்த பய­ணி­கள் அனை­வ­ரும் குடி­யு­ரிமை சோதனை முடித்து புறப்­பட்­ட­னர்.

ஆனால் ஒரு­வ­ரும் சிக்­க­வில்லை. இந்த நிலை­யில் சந்­தே­கம் அடைந்த சுங்க இலாகா அதி­கா­ரி­கள் விமா­னத்­திற்­குள் சென்று ஒவ்­வொரு இருக்­கை­யாக சோதனை செய்­த­னர்.

கழிவறை சோத­னை­யிட்­ட­போது அங்கு கேட்­பா­ரற்று ஒரு பொட்­ட­லம் கிடந்­தது. அவற்றை பிரித்துப் பார்த்த அதி­கா­ரி­கள் அதிர்ச்சி அடைந்­தனர். அதில் ஒரு கிலோ எடை கொண்ட ஒரு தங்­கக்­கட்டி இருப்­பது தெரி­ய­வந்­தது.

இதன் மதிப்பு சுமார் ரூ.46 லட்­சத்து 13,000 ஆகும். இதனை கடத்­தி­யது யார்? கழி­வ­றை­யில் விட்­டுச் சென்­றது ஏன்? என்று அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.