மயங்கி விழுந்த நபர்.. விரைந்து சென்று உதவிய மருத்துவர் – நெட்டிசன்கள் “கிரேட் டாக்டர்” என பாராட்டு

Stomp

கோல்டன் மைல் டவரில் மயங்கி விழுந்ததில் முதியவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது, கீழே விழுந்த அவருக்கு சில நிமிடங்கள் யாரும் உதவி செய்ய முன் வரவில்லை.

இதனை அறிந்த 28 வயதான பிரையன் சின் என்ற மருத்துவர் விரைந்து வந்து முதலுதவி செய்து அவரின் உயிரை காப்பாற்றினார், இந்த நிகழ்வை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கை… வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது – ரூல்ஸ் ரொம்ப முக்கியம்

கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) சுமார் 9 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை தவிர, அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு வெளியே முதலுதவி செய்ய வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டதில்லை என கூறியுள்ளார்.

டாக்டர் சின், நேஷனல் யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டலின் (NUH) எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறை மருத்துவராவார்.

கோல்டன் மைல் டவரில் karaoke lounge மற்றும் ஜப்பானிய உணவகத்தின் முன் முதியவர் மயங்கி கீழே விழும் CCTV காட்சிகளை ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது.

முதலுதவி பெற்றபிறகு அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) துணை மருத்துவர்களால் கொண்டு செல்லப்பட்டார்.

துரிதமாக செயல்பட்டு அவரின் உயிரை காப்பற்றிய டாக்டர் சின்னை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டுமான தளத்தில் நிலச்சரிவு: சிக்கிய ஒருவருக்கு காயம்