கூகுள் நிறுவனத்தின் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி…!

Wikipedia Image

ட்விட்டர், மெட்டா, அமேசானைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

லிப்டுக்குள் சிறுமியின் வாயைப் பொத்தி சில்மிஷம் செய்த 57 வயது நபர்! – சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனை!

ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலைக் காரணமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது செலவுகளைக் குறைக்கும் வகையில், ஊழியர்களை வேலை விட்டு நீக்கி, வீட்டு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் (Alphabet.), 10,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளது. மதிப்பீடு அடிப்படையில் ஊழியர்களின் பணி செயல்திறனை அறிந்து, குறைவான மதிப்பீடு பெற்றவர்களை அடையாளம் காணவும், பட்டியலைத் தயாரிக்கவும் கூகுள் நிறுவனத்தின் மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 6% பேரை வேலையைவிட்டு நீக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் மீண்டும் Christmas Wonderland: டிச.2 முதல் ஜனவரி 1, 2023 வரை… தயாரா இருங்க

உலகம் முழுவதும் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் இருந்து நடப்பாண்டில் மட்டும் சுமார் 1,00,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. பிரபல நிறுவனங்களில் தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதால், பெரிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் சிறிய ஐ.டி.நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Verified by MonsterInsights