Grab நிறுவனத்தின் 10 ஆண்டு நிறைவு… வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நிறுவனம் – இப்போதே முந்துங்கள்

Grab drivers offer free rides
Syahindah Ishak

சிங்கப்பூரின் மிகப்பெரிய வாடகை சவாரி நிறுவனமான Grab தனது 10வது ஆண்டு நிறைவு விழாவை இன்று ஆகஸ்ட் 11 கொண்டாடுகிறது.

இந்த சிறப்புவாய்ந்த தருணத்தை போற்றும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு ஒருநாள் இலவச சவாரி வழங்கப்பட உள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு: தூண்-பேருந்து இடையே சிக்கி பலியான சோகம்

அதாவது, சிங்கப்பூரின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு இன்று குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இலவச சவாரி வழங்கப்பட உள்ளது. 100 Grab ஓட்டுநர்கள் இந்த சலுகையை வழங்குவர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆதரவு தரும் வாடிக்கையாளர்களை பாராட்டுவதற்கான வழிகளில் இந்த இலவச சவாரியும் ஒன்று என்று Grab கூறியுள்ளது.

GrabRentals-ன் மின்சார அல்லது hybrid வாகனங்கள் இந்த இலவச சவாரிக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சவாரியின்போது, ​​வினாடி வினா கேள்விகளும் கேட்கப்படும். அதில் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறலாம்.

இந்த கார்கள் Grab HQ @ Singapore and Grab@ Tampines driver Centre இல் இருந்து புறப்படும்.

மரினா பே மிதக்கும் மேடை வெடித்து சிதறும் என பதிவிட்ட நபர் அதிரடி கைது