கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் புதிய 24 மணிநேரப் பயணச் சேவையை வழங்கும் கிராப்..!

grabcare service
Grab to pilot service offering round-the-clock rides home for healthcare professionals (Image: Grab)

சிங்கப்பூரில் கிராப் நிறுவனம் ஒரு புதிய சேவையைத் தொடங்குவதாக (பிப்ரவரி 12) அறிவித்துள்ளது.

இந்த புதிய சேவையில் சுகாதார ஊழியர்களுக்காக 24 மணிநேரப் பயணச் சேவையை வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19); சிங்கப்பூரில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி – 6 பேர் குணமடைந்துள்ளனர்..!

கிராப்கேர் (GrabCare) என அழைக்கப்படும் இந்த சேவை, தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு மையம் (NCID) மற்றும் டான் டோக் செங் மருத்துவமனை (TTSH) ஆகியவற்றில் பணிபுரியும் சுகாதார நிபுணர்களுக்காக வெள்ளிக்கிழமை தனது சேவையை தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கிராப்கேரில் பதிவுசெய்த சுகாதார ஊழியர்கள், கிராப் செயலியில் கிராப்கேர் ஐகானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வீட்டிற்கு பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், வீடுகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு பயணம் செய்வதற்கும், கூடுதலான மருத்துவமனைகளுக்கு தங்கள் சேவையை விரிவுபடுத்த கிராப் திட்டமிட்டுள்ளது, என நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

“கொரோனா வைரஸ் (COVID-19) விழிப்புணர்வின் காரணமாக பயணங்களை மேற்கொள்வதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய இந்த சுகாதார நிபுணர்களின் சுமையை எளிதாக்குவதை இந்த சேவை நோக்கமாகக் கொண்டுள்ளது.”

இதையும் படிங்க : சீனாவில் கொரோனா வைரஸ் (COVID-19) சம்பவங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது..!