உணவு டெலிவரி செய்யும் குடியிருப்புகளில் GrabFood ரைடர்ஸ் தொடர் திருட்டு – வைரலாகும் காணொளிகள்!

GrabFood rider takes towel from rack in HDB corridor !

உணவு பொருட்களை டெலிவரி செய்ய வரும் GrabFood ரைடர்ஸ் குடியிருப்பு நுழைவு வாயில்களில் தொடர்ந்து பொருட்களை எடுத்து கொண்டு செல்லும் காணொளிகள் இணையத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் உணவு டெலிவரி செய்துவிட்டு அதே குடியிருப்பில் GrabFood ரைடர் ஷுக்களை எடுத்து செல்லும் காணொளி அந்த HDB குடியிருப்பு CCTV கேமராவில் சிக்கியது. இது அனைவராலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இதனை தொடர்ந்து மற்றொரு திருட்டு சம்பவமும் அரங்கேறி உள்ளது. GrabFood ரைடர் சாதாரணமாக ஒரு குடியிருப்பு நுழைவாயிலில் நடப்பது போல அங்குமிங்கும் பார்த்துவிட்டு ராக்கில் இருந்த டவலை எடுத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத குழந்தை போல் நடந்து செல்லும் காணொளி CCTV கேமராவின் மூலம் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 2 ஆம் தேதி பதிவாகியுள்ள அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.