Yishun மின் தடையின் போது டிராபிக் -யை ஒழுங்குபடுத்திய GrabFood ரைடர்ஸ்!

GrabFood riders direct traffic during Yishun power outage

Yishun மின் தடையின் போது டிராஃபிக்கை ஒழுங்குப்படுத்திய GrabFood ரைடர்ஸ்.

Yishun பகுதியில் கேபிள் பழுது காரணமாக மிக பெரிய மின் தடை ஏற்பட்டது குறித்து நாம் பதிவிட்டு இருந்தோம்.

Yishun Central, Yishun Ring Road, Yishun Avenue 1, 2, 4, 6, 7, 9 & 11, Yishun Industrial Street 1 மற்றும் Yishun Industrial Park A ஆகிய பகுதிகளில் இந்த மின் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மின் தடையின் போது போக்குவரத்து விளக்குகள் இயக்கம் தடைப்பட்டது. இதனை அடுத்து GrabFood ரைடர்ஸ் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் இடரில் தவிக்கும் போது சரியான நேரத்தில் இந்த GrabFood குழு உதவி செய்ததாக முகநூல் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.

Photo : Rai Aziz

Rai Aziz என்பவர் கூறுகையில், சிங்கப்பூர் முக்கிய பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு நன்றி கூறவில்லை, துணிவு மிக்க கிரேப் இளைஞர் குழு போக்குவரத்தில் குழப்பம் ஏற்படாமல் தடுத்து வழிகாட்டியதாக, குறிப்பிட்டு இருந்தார்.