சிங்கப்பூரில் இந்த ஆண்டு “கிரேட் சிங்கப்பூர் விற்பனை” ரத்து..!

சிங்கப்பூரில் கிரேட் சிங்கப்பூர் விற்பனை (GSS) இந்த ஆண்டு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடைபெறும் இந்த நிகழ்வின் 26 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக தற்போது நடைபெறாது என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 573 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று பாதிப்பு உறுதி..!

COVID-19 தொற்றுநோயின் காரணமாக இந்த ஆண்டு இந்நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் சுற்றுலா வாடிக்கையாளர்ளுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் ‘Great Singapore Experience’ அடுத்த ஆண்டு நடைபெறும் என்று SRA-வின் நிர்வாக இயக்குனர் ரோஸ் டோங் கூறினார்.

இதையும் படிங்க : COVID-19 கிருமித்தொற்று: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!