என்னப்பா சொல்றீங்க!- இவங்களையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லையா?

Singapore president visit feiyue
Pic: File/Today

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கோவிட்-19 பரிசோதனையில் நேர்மறையான முடிவைப் பெற்றுள்ளார்.தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை முகநூல் பதிவின் வாயிலாக அவர் தெரவித்துள்ளார்.ஜூலை 4-ஆம் தேதி போடப்பட்ட பதிவில் தனக்கு லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக கூறினார்.

தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் எதிர்வரும் நாட்களில் வரவிருக்கும் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல் தவறவிட்டதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.அவருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் ,விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கையை பதிவில் குறிப்பிட்டுள்ளார்.கோவிட்-19 தொற்று வழக்குகள் குறைந்து வந்தாலும் ஆங்காங்கே தொற்று தலை தூக்குகிறது.

சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிலவரப்படி 6127 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.தற்போது மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1500000-ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவான ஆண்டிஜென்,PCR பரிசோதனை மூலம் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன.

தற்போது மருத்துவமனைகளில் 582 வழக்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் ஒன்பது பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில் தொற்றினால் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.தற்போது இறப்பு எண்ணிக்கை 1418-ஆக இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.