சிங்கப்பூர் செய்திகள்

“அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்” – பிரதமர் லீ..!

Hari Raya Aidiladha wishes to all our Muslim friends - PM Lee
Hari Raya Aidiladha wishes to all our Muslim friends - PM Lee (PHOTO: MCI)

அனைத்து முஸ்லிம்களுக்கும் தமது ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகளை, பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துக்கொண்டார்.

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் நோன்பு பெருநாள் மற்றும் ரமலான் மாதம் ஆகியவை வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டதைப் போலவே, இந்த ஆண்டின் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டமும் மாறுபாட்டை கொண்டுள்ளதாக திரு லீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : உதவி தேவைப்படும் நபர்களை பற்றி சமூக ஊடகங்களில் பதிவு செய்வதற்கு பதில், எங்கள் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள் – MSF..!

முஸ்லிம்கள் தங்கள் வருடாந்திர ஹஜ் யாத்திரையை ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்பதையும், குர்பான் சடங்குகள் உள்ளூர் மசூதிகளுக்கு பதிலாக வெளிநாடுகளில் நடத்தப்படுவது குறித்தும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

Selamat Hari Raya Aidiladha to all our Muslim friends! Just as Hari Raya Aidilfitri and Ramadan were observed…

Posted by Lee Hsien Loong on Thursday, July 30, 2020

ஆயினும்கூட, இந்த பெருநாள் சந்தோச உணர்வு நிலைத்திருக்கிறது என்றும், மேலும் பல மசூதிகள் பெருநாள் தொழுகையை நடத்துகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

“ஒரு நாள், இந்த தொற்றுநோய் முடிந்துவிடும். அதுவரை, நாம் அனைவரும் விழிப்புடன் இருப்போம், சமூகப் பொறுப்பைக் கடைப்பிடிப்பதன் மூலமும், பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளைக் பின்பற்றுவதன் மூலமும் நாம் நம் பங்கைச் செய்வோம்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற தமிழர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Twitter      – https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  – https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat  https://sharechat.com/tamilmicsetsg

Related posts