மர்மமான வூஹான் வைரஸ்; சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார ஆலோசனை..!

Health advisory for Wuhan coronavirus - MOH

உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட நான்கு பேர், ஜனவரி 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சுகாதார அமைச்சகத்தால் (MOH) அறிவிக்கப்பட்டனர்.

இதில் மொத்தம் 92 சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து MOH தெரிவித்துள்ளது, அவற்றில் 46 வூஹான் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பது பரிசோதித்ததில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள 42 நபர்களுக்கான சோதனை முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ் குறித்து பரவிய வதந்தி; பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்…!

ஒன்பது நபர்கள் இதில் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், எட்டு பேர் தொடர்பு கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள்:

உறுதிப்படுத்தப்பட்ட நான்கு நபர்களில் இருந்து 115 நெருங்கிய தொடர்புகளை MOH அடையாளம் கண்டுள்ளது. இன்னும் சிங்கப்பூரில் உள்ள 86 பேரில் 66 பேர் தொடர்பு கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ் பாதிக்கப்பட்ட நான்காவது நபரை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

சுகாதார ஆலோசனை:

  • சிங்கப்பூரர்கள் ஹூபே (Hubei) மாகாணம் முழுவதும் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • சீனாவின் பிற பகுதிகளுக்குச் செல்லும்போது தனிப்பட்ட சுகாதாரம் குறித்து தொடர்ந்து எச்சரிக்கையாகவும் கவனம் செலுத்தவும் சிங்கப்பூரர்களுக்கு MOH அறிவுறுத்துகிறது.
  • அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் திரும்பியவுடன் இரண்டு வாரங்கள் தங்கள் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.
  • உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
  • பயணிகள் தங்கள் பயணம் குறித்த வரலாற்றை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
  • அவர்களுக்கு காய்ச்சல் அல்லது சுவாச அறிகுறிகள் இருந்தால் (எ.கா. இருமல், மூச்சுத் திணறல்) முகமூடியை அணிந்துகொள்ள வேண்டும், மேலும் கிளினிக் செல்வதற்கு முன், கிளினிக்கை தொடர்புகொள்ள வேண்டும், என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவலுக்கு www.moh.gov.sg என்ற இணையத்தை பார்வையிடலாம்.