சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் – பயணிகளுக்கு ஆலோசனை

Heavier traffic expected singapore-malaysia-land-checkpoints

ஆண்டு இறுதியில் நிலச் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால், முடிந்தவரை பயணிகள் உச்ச நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.

முகத்தில் எச்சில் துப்பிய முதலாளி… கடுப்பில் கத்தியால் தாக்கி உயிரை எடுத்த பணிப்பெண் – 16 ஆண்டுகள் சிறை

அதாவது உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸில் உள்ள நிலச் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தும் பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், ஆண்டு இறுதி பள்ளி விடுமுறைக் காலத்தில் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உச்ச நேரத்தை பயணிகள் தவிர்க்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக பயணிப்போர் எண்ணிக்கை, கோவிட்-க்கு முந்தைய நிலைகளில் சுமார் 80 சதவீதத்திற்கு திரும்பியுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

ஆகையால் வரும் 17ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 2 வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கலாம் என ICA கூறியுள்ளது.

பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்… தகாத காட்சிகளை பார்த்துகொண்டே தவறாக நடந்த நபர்