சிங்கப்பூர் செய்திகள்

காவல்துறையின் சோதனைக்கு காரை நிறுத்த மறுத்து, வேகமாக சென்று மரத்தில் மோதி விபத்து..!

high-speed chase before crashing into tree at Canberra Street
(PHOTO Screengrab: SG Road Vigilante)

காவல்துறையின் சோதனைக்கு காரை நிறுத்த மறுத்த 31 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையிடம் தப்பிக்க வேகமாக சென்றதால், கான்பெர்ரா தெருவில் உள்ள ஒரு மரத்தில், தனது காரை மோதி விபத்துக்குள்ளானார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 18 பேர் ஒன்றுகூடிய சம்பவம் – துணை ஏற்பாடு செய்தவருக்கு அபராதம்..!

ஆங் மோ கியோ அவென்யூ 1க்கு அருகிலுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் (சிலேட்டார் அதிவேக நெடுஞ்சாலை) ரோந்து சென்ற போக்குவரத்து காவல் அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, வலது பாதையில் மெதுவான வேகத்தில் வாகனம் வருவதை அதிகாரிகள் கண்டனர். பின்னர், அந்த காரை சோதனைக்காக நிறுத்த கூறியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளார்.

பின்னர் அதிகாரிகள் அவரை துரத்தினர், அதை அடுத்து அந்த கார் கான்பெரா ஸ்ட்ரீட்டில் உள்ள மரம் ஒன்றின் மீது மோதியது. பின்னர் ஓட்டுநரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஓட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு அதிகாரியின் மீது வேண்டுமென்றே தும்மிய வெளிநாட்டவருக்கு சிறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts