பார்க்கிங் விதிமுறையை மீறுவோருக்கு இனி கூடுதல் அபராதம்!

thief arrest spf car steal

சிங்கப்பூரில் ஜூலை முதல் வாகன ஓட்டிகள் இனி பார்க்கிங் விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும், என்று HDB மற்றும் URA கூறியுள்ளது.

சட்டத்தை மீறி பார்க்கிங் செய்தால் மோட்டர்சைக்கிள் ஓட்டுனருக்கு $35 வெள்ளியும், கார் ஓட்டுனருக்கு $70 வெள்ளியும் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுனருக்கு $100 வெள்ளியும் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் பார்க்கிங் விதியை மீறுவோருக்கு அபராதம்; மோட்டார்சைக்கிள் $25, கார் $50 மற்றும் கனரக வாகனங்கள் $80, என இருந்தது குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு இந்த பார்க்கிங் அபராதம் கடைசியாக திருத்தம் செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

2016 இல் இருந்து 2018 வரை சராசரியாக ஒவ்வொரு வருடமும் 260,800 நோட்டீஸ்கள் சட்டத்திற்கு புறம்பான பார்க்கிங் செய்தமைக்காக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதே போல் கூப்பன் மற்றும் டிஜிட்டல் பார்க்கிங் அபராதமும் உயருவதாக HDB மற்றும் URA கூறியுள்ளது. இதற்கான அபராதங்கள் முறையே $40 மற்றும் $50 என உயர்ந்துள்ளது.