லிட்டில் இந்தியாவில் ஹனிஃபா கடை உள்ளிட்ட இடங்களுக்கு தொற்று நோயாளிகள் சென்றுவந்துள்ளனர்..!

Hillion Mall, Haniffa at Dunlop Street visited by infectious cases
Hillion Mall, Haniffa at Dunlop Street visited by infectious cases (PHOTO: Google Maps)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஹனிஃபா கடையும் இடம்பெற்றுள்ளதாக MOH தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தெம்பனிஸில் உள்ள உணவு நிலையத்தில், ஊழியர் பற்றாக்குறையை போக்கும் ரோபோக்கள்..!

புதிய இடங்களின் பட்டியல்:

118 Dunlop ஸ்டிரீட்டில் உள்ள ஹனிஃபா கடைக்கு, தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள், செப்டம்பர் 7ஆம் தேதி காலை 11.05 மணி முதல் காலை 11.50 மணி வரை சென்றுள்ளனர்.

17 Petir ரோட்டில் உள்ள Hillion மாலிற்கு, செப்டம்பர் 15 அன்று பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 4.15 மணி வரை நோயாளிகள் சென்றுவந்துள்ளனர்.

Table : MOH

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் அளிக்கப்படும் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர் தங்கும் விடுதிகளில் ஒன்பது பேருக்கு கிருமித்தொற்று பாதிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…