சிங்கப்பூரில் பகுதிநேர வீட்டு பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு

(Photo: Clean Lab)

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பகுதிநேர வீட்டு பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், திரு மார்கஸ் லிம் என்ற ஆடவர், நான்கு துப்புரவு நிறுவனங்களை அழைத்து பகுதி நேர வீட்டு பராமரிப்பு சேவைகளைப் பற்றி கேட்டார். ஆனால், இரண்டு மட்டுமே அவரிடம் சேவைக்காக திரும்பியதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்காக தேவையான உதவிகளை செய்துவரும் பெண்

தனது குடியிருப்பை சுத்தம் செய்ய இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒருவர் வர வேண்டும் என்று 38 வயதான அவர் விரும்பினார், ஆனால் மனிதவளம் இல்லை என்று நிறுவனங்கள் கூறின.

வாராந்திர சுத்தம் தேவைப்பட்டால் மட்டுமே வேலைக்கு ஆட்கள் எடுப்போம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்; “இதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் வழக்கமான வாடிக்கையாளர்களை மட்டுமே விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 20 முதல் 50 சதவிகிதம் வரை வீட்டு சுத்தம் செய்யும் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்று நிறுவனங்கள் கூறின.

இந்த நிறுவனத்திற்கு ரூமா என்ற துணை நிறுவனம் உள்ளது, இது தேவைக்கேற்ப வீட்டு பராமரிப்பு மற்றும் பகுதிநேர துப்புரவு சேவைகளை வழங்குகிறது.

குடும்பங்களின் தேவையை தொடர்ந்து கண்காணித்து, எதிர்காலத்தில் பராமரிப்பு சேவைகளின் வரம்பை மேலும் விரிவுபடுத்த முடியுமா என்று MOM மறுஆய்வு செய்யும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்கும் சிங்கப்பூர்