சிங்கப்பூர் தொடர்ந்து இந்தியாவுடன் எவ்வாறு கூட்டாளராக இருக்க முடியும்? – அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!

Heng Swee Keat Had a good meeting with Indian External Affairs Minister Dr S Jaishankar and MOS (Independent Charge) Civil Aviation, Housing & Urban Affairs and MOS Commerce & Industry Hardeep Singh Puri

இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் MOS சிவில் விமான போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் MOS வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆகியோருடன் சிங்கப்பூரின் துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் Heng Swee Keat அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

இதில், ஒரு புதிய இந்தியாவை நோக்கிய பாதை பற்றியும், இந்த பயணத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து இந்தியாவுடன் எவ்வாறு கூட்டாளராக இருக்க முடியும் என்பதையும் பற்றி ஒரு பயனுள்ள உரையாடலைப் பெற்றதாக Heng தெரிவித்தார்.

மேலும் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலக அளவில், மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புற, நிலையான தீர்வுகள் மற்றும் மனிதவள மேம்பாடு போன்ற துறைகளில் கூடுதல் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Heng, அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்லும் போது மேலதிக விவாதங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.