சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கடைவீட்டில் தீ விபத்து – காணொளி..!

Huge fire breaks out at Little India shophouse
Huge fire breaks out at Little India shophouse (Photo: Mothership)

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வட்டாரத்தில், 112A டெஸ்கர் சாலையில் உள்ள ஒரு கடைவீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இன்று (ஏப்ரல் 9) காலை 10:15 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் பெற்றதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

கடைவீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள ஓர் அறையில் இருந்த பொருள்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இறுதியில் இரண்டு நீர் ஜெட் மூலம் தீ அணைக்கப்பட்டதாகவும் SCDF தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று SCDF தெரிவித்துள்ளது.

Photo: SCDF
Photo: SCDF