சிங்கப்பூருக்குள் நுழையும் இந்தியர்கள் – பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முயற்சிக்கும் அரசாங்கம்

singapore tourism

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகளுக்காக சிங்கப்பூர் தனது எல்லைகளை மீண்டும் திறந்ததிலிருந்து சர்வதேச நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் சிங்கப்பூரை நோக்கி படையெடுத்துள்ளனர்.சிங்கப்பூருக்கு அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை அனுப்பியுள்ள நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் அனைவருக்கும் தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனை தேவைகளின்றி சர்வதேச நாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிங்கப்பூர்க்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். சிங்கப்பூரில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை சுமார் 95,000 இந்தியர்கள் சிங்கப்பூரை நோக்கி பயணித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் இந்தோனேசியர்களும் மூன்றாவது இடத்தில் மலேசியர்களும் உள்ளனர். விமானம் மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியர்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. நில எல்லை வழியாக நுழையும் மலேசியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நில எல்லை வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலை செய்வதற்கு வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் உணவகங்கள், தங்கும் விடுதிகள் போன்ற பயணம் தொடர்பான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சேவையை வழங்குவதாக புகார்கள் வருகின்றன. நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிப்பதற்கு தேவையான ஆட்களை பணியில் அமர்த்துவதற்கு உதவ சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது