நூற்றுக்கணக்கான இந்தோனேசிய ஓட்டுநர்கள் Gojek அலுவலகத்தின் முன் டயர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.!

Hundreds of Indonesian drivers stage protest, burn tyre in front of Gojek office

நூற்றுக்கணக்கான இந்தோனேசிய ஓட்டுநர்கள் gojek அலுவலகத்தின் முன் டயர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள் டாக்ஸி ஓட்டுநர்கள் கடந்த திங்கள் கிழமை அன்று தெற்கு ஜகார்த்தாவில் (South Jakarta) உள்ள Gojek தலைமையகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களது பழைய ஊக்க முறையை வேண்டி (old incentive system) கோரிக்கையை முன் வைத்தனர். ஏனெனில் இந்த முறை அவர்களுக்கு கூடுதல் போனஸைக் கொடுத்ததாக அவர்கள் கூறினார்கள்.

காலை 9 மணிக்கு தங்கள் பேரணியைத் தொடங்கி டயருக்கு தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் Gojek நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நதியீம் மகரிம் (Nadiem Makarim) உட்பட ஹோம்கிரௌன் யூனிகானின் உயர் நிர்வாகிகள் என அனைவரும் தங்களை சந்தித்து கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு கூறினர்.

Gojek-ன் துணைத் தலைவர் அல்லது நதியீம் மகரீமைச் சந்திக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதனால், எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்பு நாங்கள் வீட்டிற்கு செல்ல மாட்டோம் என்று போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ரியோ கூறினார்.

சில ஓட்டுனர்களின் இடைநீக்கம் செய்யப்பட்ட கணக்குகளை நிறுவனம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். எனவேதான் அவர்கள் மீண்டும் ஆப் (app) மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யமுடியும் என்றும் போராட்ட காரர்கள் கூறினர்.

Gojek நிறுவனத்தின் துணை தலைவர் Michael Reza Say மற்றும் VP Gede Manggala ஆகிய இருவரும் மதியம் 2 மணிக்கு போராட்டக்காரர்களை சந்தித்ததாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.