முன்னாள் மனைவியைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!

2 men charged with forging retrenchment letters to get COVID-19 support grants

முன்னாள் மனைவியைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் சீட் செர் இங் (Seet Cher Hng). இவருக்கு தற்போது 69 வயது ஆகிறது. இவர், கடந்த 1993- ஆம் ஆண்டு ஐடிஇ கல்லூரி சென்ட்ரலில் (Institute of Technical Education College Central) தேர்வுப் பிரிவின் பிரிவு இயக்குனரான லோ ஹ்வீ ஜியோக்கை (Low Hwee Geok) (வயது 56) திருமணம் செய்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2011- ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்துப் பெற்றுக் கொண்டனர்.

மின்சாரத்தில் இயங்கக்கூடிய முதல் பயணிகள் படகுச் சேவையைத் தொடங்கவிருக்கும் ‘Shell’ நிறுவனம்!

ஆனால் திருமண சொத்துக்களைப் பிரிப்பதில் சீட் அதிருப்தி அடைந்தார். 2011- ஆம் ஆண்டில் இருந்து 2018- ஆம் ஆண்டுக்கு இடையே, சீட் சுமார் 5,00,000 சிங்கப்பூர் டாலர் வரை வேண்டும் என்று தனது முன்னாள் மனைவியிடம் கேட்டிருந்தார். ஆனால் அவர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாததால் சீட் கடும் கோபம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2018- ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டுக்கு முன், ஐடிஇ கல்லூரி சென்ட்ரலில் லோவின் காரில் ஒரு கடிதத்தை விட்டுவிட்டு சென்றார். அதில், 5,00,000 சிங்கப்பூர் டாலர் கோரி சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதாக சீட் அச்சுறுத்தினார்.

எனினும், அவரது முன்னாள் மனைவி அவரது கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவில்லை. இதனால் சீட் தனிமைப்படுத்தப்பட்டு, வருத்தப்பட்டு, மனச்சோர்வடைந்தார். கடும் விரக்தியில் இருந்த அவர், கடந்த 2018- ஆம் ஆண்டு ஜூலை 19- ஆம் தேதி அன்று இரவு 07.30 மணியளவில் முன்னாள் மனைவி பணியாற்றும் இடமான ஐடிஇ கல்லூரி சென்ட்ரல் வளாகத்திற்கு சென்ற சீட் கத்தியைக் கொண்டு அவரை சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே லோ உயிரிழந்தார்.

ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா 2021: முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு!

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறையினர், இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சீட் கொலை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்று (22/09/2021) இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன், அந்த நபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அந்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். நீதிபதியின் தீர்ப்பாள் நீதிமன்றத்தில்
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.