“சிங்கப்பூரில் சிறந்த கொள்கைகளும் திட்டங்களும் மேம்படுத்தப்படும்” – பிரதமர் லீ..!

I look forward to working with our colleagues across the aisle to build a better and stronger Singapore - PM Lee
I look forward to working with our colleagues across the aisle to build a better and stronger Singapore - PM Lee (Photo: Facebook/ Lee Hsien Loong)

சிங்கப்பூரில் சிறந்த கொள்கைகளும் திட்டங்களும் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 24 அன்று பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது, ​​அதில் மொத்தம் 12 எதிர்க்கட்சி MPக்கள் இருப்பார்கள், அதாவது பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த 10 பேரும், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த இரண்டு NCMP க்கள் இருப்பார்கள். சமீபத்திய வரலாற்றில் இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும் என்று பிரதமர் லீ  தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு – வேலையின்மை கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்வு ..!

பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் முறையாக எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பொறுப்பை நிறைவேற்ற அவருக்கு ஊழியர்களின் ஆதரவு மற்றும் வளங்கள் வழங்கப்படும் என்றும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே முதலில் பதிலளிக்கும் உரிமை மற்றும் அவரது உரைகளுக்கு அதிக நேரம் போன்ற சலுகைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆக்கபூர்வமான விவாதங்களை மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியிடமிருந்து மாற்றுக் கொள்கைகளையும் எதிர்பார்ப்பதாக திரு லீ அவர்கள் குறிப்பிட்டார்.

When Parliament reopens on 24 August, it will have a total of 12 Opposition MPs — ten from the Workers’ Party, and two…

Posted by Lee Hsien Loong on Tuesday, July 28, 2020

“இதன் மூலம், வாக்காளர்கள் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அனைத்து சிங்கப்பூரர்களுக்குமான சிறந்த கொள்கைகளும் திட்டங்களும் மேம்படுத்தப்படும்.”

சிறந்த மற்றும் வலுவான சிங்கப்பூரை உருவாக்க சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானம் மூலம் சுமார் 177 பேர் சென்றனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg