வேண்டுமென்றே கட்டாய உத்தரவை மீறிய நபர்; பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ICA..!

ICA cancels Singaporean's passport for breaching stay-home notice
ICA cancels Singaporean's passport for breaching stay-home notice

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய காரணத்திற்காக சிங்கப்பூரர் ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

இந்த வழக்கு, விசாரணைக்காக சுகாதார அமைச்சகத்திற்கும் (MOH) பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 70 பேருக்கு தொற்று உறுதி; மொத்தம் 800-ஐ தாண்டியது..!

53 வயதான கோ இல்லியா விக்டர் என்ற அவர், சிங்கப்பூரிலிருந்து இந்தோனேசியாவின் படாம் பகுதிக்கு கடந்த மார்ச் 3 அன்று பயணம் செய்தார். பின்னர் கடந்த மார்ச் 19 அன்று தனா மேரா ஃபெர்ரி டெர்மினல் (Tanah Merah Ferry Terminal) வழியாக சிங்கப்பூர் திரும்பினார்.

அதனை தொடர்ந்து, கோ சிங்கப்பூருக்குள் வந்த உடன், ​​இந்தோனேசியாவிற்கு சென்று வந்த காரணத்திற்காக அவருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு வழங்கப்பட்டது.

அதாவது, கடந்த மார்ச் 16 அன்று இரவு 11.59 மணி முதல், ஆசியான் (ASEAN) நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, சிங்கப்பூருக்குள் வரும் அனைத்து பயணிகளுக்கும், 14 நாட்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு வழங்கப்படும்.

அதனை தொடர்ந்து எல்லா நேரமும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு அவருக்கு வழங்கப்பட்ட பின்னரும், அதே நாளில் இந்தோனேசியாவுக்குத் திரும்ப முடிவு செய்தார்.

கட்டாய உத்தரவை மீறுவதாகவும், இதனால் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ICA அதிகாரிகள் எச்சரித்த போதிலும், அதை அவர் பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிய பாதுகாப்பு நடவடிக்கை; அபராதம் விதித்ததாகப் பரவும் வதந்தி..!

மார்ச் 24, 2020 அன்று, கோ இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் குரூஸ் சென்டர் வழியாக சிங்கப்பூருக்குத் திரும்பினார். மேலும் அவருக்கு, மார்ச் 24 முதல் 2020 ஏப்ரல் 7 வரை இரண்டாவது 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு வழங்கப்பட்டது.

கோ, தனது முதல் வீட்டில் தங்கும் உத்தரவுக்கு இணங்காததன் மூலம் பொறுப்பற்ற நடத்தை காட்டியுள்ளார் என்றும், 2020 மார்ச் 19 அன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு, பின்னர் 24 மார்ச் 2020 அன்று சிங்கப்பூர் திரும்பினார் என்றும் ICA குறிப்பிட்டுள்ளது.

வேண்டுமென்றே கட்டாய உத்தரவை மீறியதை கருத்தில் கொண்டு, அவரின் பாஸ்போர்ட்டை ICA ரத்து செய்துள்ளது.

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil