இரு வெளிநாட்டவர்களிடம் லஞ்சம், பாலியல் சேவைப் பெற்றதாக அதிகாரி மீது குற்றச்சாட்டு!

(Photo: TODAY)

சிங்கப்பூரில் 47 வயதான குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரி மீது லஞ்சம் வாங்கியது மற்றும் பாலியல் உதவிகளை ஏற்றுக்கொண்டதாக இன்று (நவம்பர் 24) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு சிறப்பு அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உதவியதற்காக அந்த ICA அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தற்கொலை… மனிதவள அமைச்சகம் விசாரணை

தியோ வீ பெங் (Teo Hwee Peng) என்ற அந்த அதிகாரி, கடந்த 2018 முதல் 2019 வரை அந்த இரு பெண்களிடமிருந்தும் பணம் மற்றும் பாலியல் சேவைகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது என்று CPIB தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தங்குவதற்கான சிறப்பு அனுமதிக்கு ஈடாக, ஆப்பிள் iPhone X மற்றும் பாலியல் சேவை போன்றவற்றை பெற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த அதிகாரி, S$2,100 ரொக்கம் மற்றும் 7,000 yuan (S$1,430) ஆகியவற்றை உதவிக்கான வெகுமதியாக பெற்றுக் கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தியோ மீது 12 எண்ணிக்கையிலான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக அந்த இரண்டு பெண்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் குற்றவாளிகளுக்கு, S$100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ… 20 பேர் வெளியேற்றம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…