மெல்லும் புகையிலை, சிகரெட் பறிமுதல் – வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு

ica-seize-duty-unpaid-cigarettes-tuas
ICA

துவாஸ் சோதனைச் சாவடியில் சுமார் 77,500 சுங்க வரி செலுத்தப்படாத சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 1,360 கிலோ மெல்லும் புகையிலை ஆகியவை கைப்பற்றப்பட்டது.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நேற்று முன்தினம் அக்டோபர் 20 அன்று அவற்றை பறிமுதல் செய்தது.

குற்றவாளிகளை தப்பிக்க வைக்க S$32,500 லஞ்சம்… சிக்கிய போலீஸ் அதிகாரி

மலேசிய பதிவு செய்யப்பட்ட லாரி மூலம் இந்த பொருட்கள் சிங்கப்பூருக்கு கடத்தப்பட்டதாக ICA கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 39 வயதான மலேசியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செலுத்தப்படாத வரி, சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆகியவை முறையே S$661,850 மற்றும் S$64,774.50 என ICA தெரிவித்துள்ளது.

உலகின் முதல் செயற்கை இறைச்சி கண்டுபிடிப்பு நிலையம் நம்ம சிங்கப்பூரில்!