ICAஆல் கூறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ICA கட்டிடத்தில் உள்நுழைய அனுமதி

ICA passport singapore

கடந்த சில மாதங்களாக சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டு வருவதால் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை அதிகளவில் பெற்று வருகிறது குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA)

பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் நிலையைச் சரிபார்க்கவும், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை
விரைவுபடுத்த வருகை தரும் நபர்களால் ICA கட்டிடத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக ICA தரப்பில் கூறப்பட்டுள்ளது

பாஸ்போர்ட் வழங்குவதை எளிதாக்குவதற்கு ஜூன் 13 முதல் பாஸ்போர்ட் சேகரிப்புக்காக ICA’ல் உள்நுழைய சில மாற்றங்களை அறிவித்துள்ளனர்.
1. ICA ஆல் அறிவிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களை மட்டுமே ICA ஏற்கும்: (பாஸ்போர்ட்டை சேகரித்தல், துணை ஆவணங்களை சமர்ப்பித்தல், புகைப்படங்களை மீண்டும் சமர்ப்பித்தல்)

2. ICA ஆல்அறிவிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தாங்கள் என்ன கொண்டு வர வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. தங்கள் பாஸ்போர்ட்டுகளை பெற வரும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் ICA கட்டிடத்தில் கூட்டத்தை குறைக்க, தாங்களாகவே முன்வந்து பெற்றுகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

4. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சிறப்பு உதவி தேவைப்படுபவர்கள் உடன் ஒரு நபரை அழைத்து வரலாம்.

5. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் ICA கட்டிடத்தில் நுழைவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆதார ஆவணங்களைக் காட்ட வேண்டும்:
a. பாஸ்போர்ட் பெறுவதற்கு
b. ஐசிஏ கட்டிடத்தில் பாஸ்போர்ட் சேகரிப்புக்கான மின்-அபாயின்மென்ட் முன்பதிவு;
c. ஆவணங்கள்/புகைப்படங்களைச் சமர்ப்பிக்க
d. துணை ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான மின்னஞ்சல் அறிவிப்பு