சுமார் S$90,000க்கும் அதிக மதிப்புள்ள சட்டவிரோத பாலியல் தொடர்பான மருந்துகள் பறிமுதல்!

Illegal sexual medicines seized
(Photo: Health Sciences Authority)

சிம்ஸ் டிரைவில் ( Sims Drive) உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த புதன்கிழமை (ஜன. 20) மேற்கொள்ளபட்ட சோதனையின் போது சுமார் S$90,000க்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத பாலியல் தொடர்பான மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

சுமார் 62,000 யூனிட் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இந்தியா-சிங்கப்பூர் இடையே அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விமானம் – முன்பதிவு தொடக்கம்!

பாலியல் தொடர்பான மருந்துகள் இருப்பதாக நம்பப்படும் ஆறு பொட்டலங்கள் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையின் ஆதரவோடு இந்த சோதனை நடவடிக்கையை நடத்தியதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் 23 வயதான சீன நாட்டவர், சிம்ஸ் டிரைவில் உள்ள குடியிருப்பு பிரிவில் கைது செய்யப்பட்டார்.

(Photo: Health Sciences Authority)

சோதனையின் போது, ​​மேலும் சட்டவிரோத பாலியல் தொடர்பான மருந்துகள் அந்த குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.

சட்டவிரோதமாக சுகாதார பொருட்களை இறக்குமதி செய்து, அதனை வழங்கியதற்காக அந்த ஆடவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலை வடிகால் கம்பியின் இடைவெளியில் சைக்கிள் சிக்கி விபத்து – வெளிநாட்டவர் மருத்துவமனையில்…