இயந்திரங்களிலிருந்து சட்டவிரோதமாக முகக்கவசங்களை பெற்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது!

(Photo: Joshua Lee)

Temasek அறக்கட்டளை அமைத்ததுள்ள இயந்திரங்களில் இருந்து முகக்கவசங்களை சட்டவிரோதமாக பெற்றதன் சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்தி வெளியீட்டில், சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இயந்திரங்களிலிருந்து அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முகக்கவசங்களை பெற முடியாமல் போனதாக கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 5 வரை புகார்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் Boat Quay-ல் ஏற்பட்ட சண்டை….8 பேர் கைது!

கணினி பதிவு சோதனை

காவல்துறை அதிகாரிகள் கணினி பதிவுகளில் மேற்கொண்ட சோதனையில், முகக்கவசங்கள் ஏற்கனவே பெறப்பட்டதாக காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மூன்று பேர் கைது

ஆங் மோ கியோ அவென்யூ 10இல் அமைந்துள்ள இயந்திரம் ஒன்றில் இருந்து 40க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பெறுவதற்கு தனிப்பட்ட தகவல்களைப் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக 38 வயது ஆடவர் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

மற்றொரு வழக்கு, Clementi சமூக நிலையத்தில் 41 வயதான பெண் ஒருவர், 60க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை முறைகேடாக பெற்றதாக கூறப்படுகிறது. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

மூன்றாவது வழக்கில் 52 வயதான ஆடவர் ஒருவர், பெடோக் Reservoir சாலையில் உள்ள இயந்திரத்தில் 60க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை சட்டவிரோதமாக பெற்றதாக, அவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை என நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்தனர்.

காவல்துறை கேமராக்கள் மற்றும் இயந்திரங்களில் உள்ள கேமராக்ககள் சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறைக்கு உதவியதாக குறிப்பிட்டுள்ளது.

சட்டம்

இது போன்ற மோசடி குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

சட்டவிரோதமாக தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தும் குற்றவாளிகளுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூர் பிரதமர் திரு. லீயின் உள்ளூர் விடுப்பு குறித்த அறிவிப்பு!

கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் சம்பவ இடத்திலேயே மரணம்

வேலை அனுமதி, S Pass விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…