உலக போட்டித்திறன் தரநிலை குறியீட்டு பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடம்..!

IMD’s World Competitiveness Index ranks Singapore tops the list
IMD’s World Competitiveness Index ranks Singapore tops the list (Photo: cushman wakefield)

இன்ஸ்டிடியூட் ஃபார் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் (IMD) தொகுத்த வருடாந்திர உலக போட்டித்திறன் தரநிலை குறியீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டும் சிங்கப்பூர் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. வணிக அமைப்பு, அதிநவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் திறமையான ஊழியர்கள் ஆகியவற்றின் மூலம் இது சாத்தியம் என்று IMD குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த பட்டியலில் புதிதாக 2 இடங்கள் சேர்ப்பு..!

பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஆசியான் நாடுகளில் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து மட்டுமே சுகாதார உள்கட்டமைப்பில் சாதகமான செயல்திறனைக் காட்டியுள்ளன.

இதில் பொருளாதார நடவடிக்கைகள், அரசாங்கம், நிறுவனங்கள் என இருதரப்பின் செயல்திறன், உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

டென்மார்க் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, இது கடந்த ஆண்டு 8 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல், சுவிட்சர்லாந்து 3வது இடத்தையும், நெதர்லாந்து 4 வது இடத்தையும் தக்க வைத்துள்ளது. ஹிங் காங் 5 வது இடத்தைப் பிடித்தது, இது 2019ல் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

தரவரிசையில், சீனா 14வது இடத்திலிருந்து 20வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அமெரிக்கா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, இது 2019ல் 3வது இடத்தில் இருந்தது.

இந்த பட்டியலில் 43வது இடத்தில் இந்தியா உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கூடுதலாக 42 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      https://twitter.com/tamilmicsetsg

??Telegram  https://t.me/tamilmicsetsg

?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg