சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் சிறப்புக் குழு தொழிலாளர்களை சந்தித்தது..!

Specialist Team arrives at the shipyard and are briefed by the company on how they safeguard their workers during prolonged period of haze (Photo: Singapore Ministry of Manpower )

தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த தொழில்சார் மருத்துவ (OM) மற்றும் தொழில்சார் சுகாதார (OH) வல்லுநர்கள் அடங்கிய சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் சிறப்புக் குழு, Haze Management திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்க வருகை தந்தனர்.

மனிதவள அமைச்சகத்தின் சிறப்புக் குழு கப்பல் துறைமுகத்துக்கு வருகை தந்தனர். இதில் தொழிலாளர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றி விளக்கினர்.

அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் சில:

இடர் மதிப்பீடுகள் மற்றும் பாதுகாப்பான பணி நடைமுறைகளை மதிப்பாய்வு செய்தல்.

பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களின் பட்டியலைப் புதுப்பித்தல் மற்றும் புகைமூட்டம் காலங்களில் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கமளித்தல்.

மேலாண்மை மற்றும் ஊழியர்களுக்கு தினசரி புகைமூட்டம் அறிக்கைகளை வழங்குதல் மற்றும் புகைமூட்டம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர்களுடன் சரியான நேரத்தில் தொடர்பு கொள்ளுதல், ஆகிய முயற்சிகளை மேற்கொண்டனர்.

சிறப்புக் குழு பணியிடத்தில் உள்ள தூசி மற்றும் இரைச்சல் வெளிப்பாடு நிலைகளை குறித்து அளவீடு செய்தது, அவற்றைத் தணிப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கியது.

மேலும், இதுபோன்ற புகை மூட்டம் அதிகமுள்ள காலங்களில் அதிகப்படியான தண்ணீர் பருகவும் ஆலோசனை வழங்கினர்.