ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

Photo: Air India Express

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முக்கியமான அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் மோசடி பல வடிவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஈ மெயில், SMS மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை ஊடக வாயிலாக நாம் அன்றாடம் காண்கிறோம். இந்த சைபர் குற்றங்கள் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தையும் தாக்கி உள்ளது. அந்நிறுவனம் இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு:

சைபர் மோசடிகள் +91 6302317644 என்ற போலியான தொலைபேசி எண் மூலம் இயக்கப்படுகின்றன. இந்த போலி தொடர்பு எண் மூலமாக தவறான தகவல்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு பகிரப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கூறுகையில், மேலே குறிப்பிட்டுள்ள தொடர்பு எண்ணுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்றும், பயணிகள் எங்களை தொடர்பு கொள்ள www.airindiaexpress.in என்ற இணைய முகவரியில் உள்ள தொலைதொடர்பு எண்களை பயன்படுத்துமாறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.