இந்தியாவில் 8 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல் நிறுவனம்!

Photo: Airtel

அதிவேக இணைய சேவையான 5ஜி சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 1- ஆம் தேதி அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் இந்திய அமைச்சர்கள், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் சுனில் பாரதி மிட்டல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – போலி பாஸ்போர்ட் என சிறையில் அடைத்தது போலீஸ்

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் (Airtel) தொடங்கியுள்ளது.இதன் மூலம் நாட்டிலேயே 5ஜி சேவையைத் தரும் முதல் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது ஏர்டெல். அதேபோல், நாட்டின் பிற பெரு நகரங்களில் அடுத்தாண்டு மார்ச் முதல் 5ஜி சேவை வழங்கப்படும்; 2024- ஆம் ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்துள்ளார். தற்போது, 4ஜி சேவைக்கான கட்டணமே 5ஜி சேவைக்கு வசூலிக்கப்படும். இது தற்காலிகமானது. விரைவில் 5ஜி சேவைக்கான கட்டணம் அறிவிக்கப்படும் எனவும் ஏர்டெல் கூறியுள்ளது.

ஏர்டெலைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அக்டோபர் மாதம் இறுதியில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், ஐடியா- வோடாஃபோன் நிறுவனம் 5ஜி சேவையைத் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்திய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்கும் விமான நிறுவனங்களின் பட்டியல்!

சமீபத்தில் இந்திய அரசால் ஏலம் விடப்பட்ட 5ஜி அலைக்கற்றையை அதிகளவில் வாங்கி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்திலும், ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில ஐடியா- வோடாஃபோன் நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.