இன்று முதல் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான ‘VTL’ விமான சேவை!

Photo: Changi Airport

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கான விமான சேவை இரு மார்க்கத்திலும் இன்று (29/11/2021) தொடங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. எனினும், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 1,000- க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியா, சிங்கப்பூர் இடையேயான ‘VTL’ விமான சேவை இன்று (29/11/2021) தொடங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் இரு நாடுகளிடையேயும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவையைத் தொடங்கவுள்ளனர்.

இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமானங்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், கொச்சி, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘Non- VTL’ விமானங்களை இயக்குகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்.

மலேசிய பிரதமர் இன்று சிங்கப்பூருக்கு வருகிறார்!

இன்று முதல் இந்தியா, சிங்கப்பூருக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுவதால், விமான நிலையங்கள் அதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதேசமயம், வரும் நாட்களில் இரு நாடுகளிடையேயான விமான சேவையை அதிக அளவில் வழங்க விமான நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

இரு நாடுகளிடையேயான விமான போக்குவரத்தின் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு ‘VTL’ விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

ஒரேநாளில், இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளிடையே விமான சேவைத் தொடங்கப்பட உள்ளதால், சாங்கி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது விமான நிலையத்தின் நிர்வாகம்.