இந்தியர்களை வரவேற்கும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் – சலுகைகளுடன் வரவேற்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சுற்றுலா தளங்கள்

India has been one of the top source markets for visitor arrivals into Singapore and family travel has featured highly as an audience segment

சிங்கப்பூரின் நட்பு நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடைகால விடுமுறையை பல்வேறு சுற்றுலா தளங்களில் செலவழிப்பது இந்திய குடும்பங்களின் வழக்கமாகும். இதனைத் தொடர்ந்து இந்தியர்களின் கோடைகால விடுமுறையை சிங்கப்பூரில் செலவிடுவதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் ஆகியவை தங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து ,இந்திய குடும்பங்களை பிரபலமான தீவிற்கு வரவேற்கும் பிரச்சாரத்தை அறிவித்துள்ளன.

“உங்கள் குடும்பத்துடனான பொழுதை சிங்கப்பூரில் அனுபவிக்கவும் ” என்ற பிரச்சாரம் பள்ளி விடுமுறை காலத்தில் குடும்ப சுற்றுலா பயணிகளுக்கான அனுபவத்தை வழங்குகிறது.சிங்கப்பூருக்கு வருகை தரும் பார்வையாளர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள் ஆவர்.மேலும் குடும்ப பார்வையாளர்களின் பிரிவில் இந்தியர்கள் அதிக அளவில் சிங்கப்பூருக்கு வருகை புரிகின்றனர்.

COVID-19 வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ,தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சிங்கப்பூருக்குள்நுழையும் போது தனிமைப் படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், புறப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட Covid-19 பரிசோதனையின் எதிர்மறையான முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்கான சிங்கப்பூரின் இந்த பிரச்சாரம் ஆனது ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஜூன் 30 வரை நடைபெறும். மேலும் இந்திய பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விமான கட்டணங்களை பெற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்டோசா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா, கார்டன்ஸ் பை தி பே, மண்டாய் வனவிலங்கு குழு, மெரினா பே சாண்ட்ஸ், ஜூவல் சாங்கி விமான நிலையம் போன்ற சுற்றுலா அனுபவம் நிறைந்த இடங்களின் சலுகைகளும் அடங்கும் என்று விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.