வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமை!

Singapore visa free travel arrangement
Pic: REUTERS/Edgar Su

இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், நோய்த்தொற்று தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, டெல்லி, ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

‘சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இந்த நிலையில், ஒமிக்ரான் நோய்த்தொற்று விகிதத்தின் அடிப்படையில் அபாயம் உள்ள நாடுகள் (At Risk Countries), அபாயம் இலலாத நாடுகள் என்று உலக நாடுகளை இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளையும் அவ்வப்போது மாற்றி வருகிறது.

அந்த வகையில், நேற்று (07/01/2022) இந்திய அரசின் (Government Of India) சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health And Family Welfare) வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

MaskPure™ AIR+ முகக்கவசத்தை எப்படி பயன்படுத்துவது? எப்படி துவைப்பது?- விரிவான தகவல்!

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், எட்டாவது நாளில் ஆர்டி- பிசிஆர் கொரோனா பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் ஜனவரி 11- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபாயம் உள்ள நாடுகள் என்றழைக்கப்படும் ‘ரிஸ்க் நாடுகள்’ பட்டியலில் கென்யா, காங்கோ, தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், ஹாங்காங், நியூசிலாந்து, சீனா, கானா, நைஜீரியா, எத்தியோப்பியா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில், போட்ஸ்வானா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 19 நாடுகள் உள்ளன.

“நான் படுத்து உறங்கியதில் நீங்கள் படுக்கணுமா..?” சிங்கப்பூரில் $200 டாலர் வரை விலை போகும் தலையணைகள்! இப்படியும் சம்பாதிக்க வழி இருக்கு!

சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தற்போது கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.