இந்தியாவில் இருந்து வந்த Work pass, Work permit கீழ் பணிபுரிவோருக்கு புதிதாக தொற்று!

India Singapore

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்து 11 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 58,208 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

பணிப்பெண்ணை கொலை செய்த வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை!

மருத்துவமனையில்..

மேலும், 21 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது உடல்நலம் தேறியும் வருகின்றனர்.

மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் இல்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.

சமூக வசதிகளில்..

மேலும், 62 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

கிருமித்தொற்று பாதிப்பு

நேற்றைய நிலவரப்படி, வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 7 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதில் 5 பேர் தற்போது சிங்கப்பூரில் பணிபுரியும் பெண்கள். ஒருவர் இந்தியாவில் இருந்து வந்த 33 வயதான வேலை அனுமதி (work pass) வைத்திருப்பவர்.

நான்கு பேர் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் இந்தியாவில் இருந்து வந்த வேலை அனுமதியின்கீழ் (work permit) பணிபுரிபவர்கள்.

தற்போதைய நிலவரப்படி 58,320 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்ல… முன்பதிவு ஆன்லைனில்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…