இனி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிக்கலாம்!

இந்தியா-சிங்கப்பூர் (India to Singapore Flights) இடையே செல்லும் பயணிகளுக்கு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பு திட்டங்கள் மூலம் இந்தியா-சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூரில் கனமழையை தொடர்ந்து… அடுத்த 2 வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கேரளாவின் கொச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சிங்கப்பூரில் இருந்து, பெங்களூரு வழியாக கொச்சிக்கு மீண்டும் அந்த விமானம் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் / அழைப்பு மையங்கள் / நகர அலுவலகங்கள் / அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் விமானங்களை முன்பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்கள் பெற அதன் வலைத்தளத்தை பார்க்கவும்.

போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கையில் 89 சந்தேக நபர்கள் கைது