சரளமாக மாண்டரின், ஹொக்கியன் மொழி பேசி வாடிக்கையார்களை ஈர்க்கும் இந்திய ஊழியர்!

Indian man speaks fluent Mandarin & Hokkien

சிங்கப்பூரில் இந்திய ஊழியர் ஒருவர் சரளமாக மாண்டரின் மற்றும் ஹொக்கியன் பேசும் காணொளி அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட இந்த காணொளி, ஒரு நாள் கழித்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 10 கார்கள் சங்கிலி தொடராக மோதி விபத்து – காணொளி

நான்கரை நிமிடம் அடங்கிய அந்த காணொளியில், இந்திய ஊழியர் தான் விற்கும் துடைப்பம் பற்றிய முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூறுகிறார்.

அவர் மாண்டரின் மற்றும் ஹொக்கியன் மொழிகளில் தெளிவாக, படிப்படியான வழிமுறைகளில் விளக்கி, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதையும் காணலாம்.

பேஸ்புக் காணொளியில், அனைவரும் ஒருமனதாக அவரின் இந்த திறமையை பாராட்டினர்.

அவரின் நேர்த்தியான விளக்க திறன் மற்றும் இந்திய ஆடவரின் மாண்டரின் மற்றும் ஹொக்கியன் புலமை, உச்சரிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதாக கருத்துகளில் பலர் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இந்த மாதத்தில் மட்டும் 7 வேலையிட மரணங்கள்..!