சிங்கப்பூரில், இந்தியர் COVID-19 தொற்றில் இருந்து மீண்டு பின்பு உயிரிழந்தார் – சுகாதார அமைச்சகம்..!

Indian national, died on Tuesday after having recovered from COVID-19
Indian national, died on Tuesday after having recovered from COVID-19 (Photo: Mothership)

சிங்கப்பூரில் COVID-19 சம்பவம் 28,388 என அடையாளம் காணப்பட்ட, 48 வயதான இந்திய நாட்டவர் COVID-19 தொற்றில் இருந்து மீண்டு பின்பு இறந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட தற்காலிக வீட்டுத் தளத்தில் செவ்வாய்க்கிழமை காலை மயக்கம் அடைந்த அவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறும் – பிரதமர் லீ..!

அங்கு அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மே 15ஆம் தேதி அவருக்கு COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது, பின்பு அவர் தொற்றுநோயிலிருந்து மீண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் இறப்புக்கான காரணம் இதய நோய் (ischaemic heart disease) என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg