சிங்கப்பூரில் ஊழல், மோசடி குற்றங்களுக்காக இந்திய நாட்டவருக்கு சிறை மற்றும் அபராதம்..!

Indian national jailed 18 months for corruption, fraud and money laundering
Indian national jailed 18 months for corruption, fraud and money laundering (Photo: Corrupt Practices Investigation Bureau)

சரக்கு மற்றும் சேவை வரி (GST) சுற்றுலா பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் மோசடி, ஊழல் மற்றும் பணமோசடி போன்ற குற்றங்களுக்காக 41 வயதான இந்திய நாட்டவருக்கு வியாழக்கிழமை (ஜூன் 18) S$66,981 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முத்துவேல் சங்கர் என்ற அவருக்கு கூடுதலாக 18 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு..!

முத்துவேல் மீது ஜூன் 4ம் தேதி சுமார் S$2,800 சம்பந்தப்பட்ட ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகள், S$29,800 சம்பந்தப்பட்ட 6 GST ஏய்ப்பு உள்ளிட்டவை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2019 அக்டோபரில் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது CPIB-யால் அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPIB, IRAS மற்றும் காவல்துறையின் வணிக விவகாரத் துறை (CAD) ஆகியவை மேற்கொண்ட விசாரணையில் சங்கர் செய்த பல்வேறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மின்னணு சுற்றுலா பணத்தைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் (eTRS) கீழ், சேவை வரியைத் திரும்பப் பெறும் வசதியை குறைந்தது ஆறு முறை தவறாகப் பயன்படுத்தியதாக IRAS விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுற்றுலா பயணிகள் திரும்ப பெறும் வசதியில் சங்கர் குறைந்தது S$29,800 தொகையை தவறாக பெற்றுள்ளார், இது சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும்.

சரக்கு மற்றும் சேவை வரி பெற்றுத்தர உதவிய சுங்கத்துறை அதிகாரியான முகமது யூசோஃபிற்கு அவர் சுமார் S$2,800 வழங்கியுள்ளார்.

இவை லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூசோப் இனி சிங்கப்பூர் சுங்க நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளன.

இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த பயணிகளுக்கு COVID-19 சோதனைகளின் கட்டணம் தள்ளுபடி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg