சிங்கப்பூர் சிறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு தண்டனை – குடிபோதையில் விபத்தில் சிக்கிய பின்பு காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி

சாலையில் வாகனத்தை மிகவும் கவனமாக இயக்குவது சிறந்தது. அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டுவது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது என்று சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் சிலரால், அதே சாலையில் சட்ட விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும் மற்றவர்களுக்கும் பேராபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியரான கிருஷ்ணராவ் நரசிம்ம நாயுடு (34) குடிபோதையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதற்காக காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதால் 5000 சிங்கப்பூர் டாலர்களும் ,நான்கு வார சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Pioneer சாலை அருகே நரசிம்ம நாயுடு விபத்தில் சிக்கியதாக (CBIB) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது

விபத்தில் சிக்கிய நாயுடு SGD 50 நோட்டை அதிகாரியிடம் கொடுத்து “ தயவுசெய்து உதவுங்கள் ” என்று கூறியுள்ளார்.அவருக்கு ஆல்கஹால் பரிசோதனை செய்தபோது மது அருந்தி இருப்பது உறுதியானது. எனவே காவல்துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர்.

காவல்துறை அதிகாரிகள் நாயுடுவின் குற்றத்திற்காக கைது செய்ய முயன்றபோது அவர் செய்த போக்குவரத்து குற்றங்களுக்காக விசாரணைகளை தவிர்க்க அதிகாரிக்கு லஞ்சத்தை வழங்கியுள்ளார்.ஆனால் அதிகாரி லஞ்சத்தை ஏற்க மறுத்துள்ளார். உடனடியாக வழக்கு சிபிஐபிக்கு மாற்றப்பட்டுள்ளது

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.ஊழல் குற்றத்தில் தண்டிக்கப்பட்ட எவருக்கும் 5 ஆண்டுகள் சிறை அல்லது SG$100000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.