“ஏன்பா தேவையில்லை வேலை…” – இந்திய ஊழியருக்கு சிங்கப்பூரில் சிறை

(Photo: Today)

சிங்கப்பூரில் கழிவறையில் பெண் ஒருவரை மறைந்திருந்து பார்த்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 38 வயதுடைய பாண்டியன் செல்வகுமார் என்ற அந்த இந்திய ஊழியருக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கட்டுமான ஊழியராக இருந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த தவறை செய்தார். அதாவது 29 வயதான பாதிக்கப்பட்ட பெண் அலுவலகத்தை விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பாண்டியன் இருந்துள்ளார், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் நீங்க வெளியே போகலையா என கேட்டுள்ளார். அதற்கு பாண்டியன் அங்கு எதோ சரிசெய்யும் வேலை இருப்பதாகவும் “இதோ கிளம்பி விடுவேன்” எனவும் கூறியுள்ளார்.

அதோடு அந்த பெண் கழிவறைக்குள் சென்று ஏதும் செய்யாமல் காத்திருந்தார். அப்போது பக்கத்துக்கு கழிவறை கதவு திறக்கும் சத்தம் கேட்டுள்ளது.

எதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்த அந்த பெண், இரு கழிவறைக்கு இடையில் இருந்த இடைவெளியை நோட்டமிட்டார். அப்போது பாண்டியனின் பாதி முகம், ஒற்றை கண் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தமிட்டார்.

உடனே அந்த பெண் கழிவறையை விட்டு வெளியேறினார், அப்போது பாண்டியன் சிறிய குப்பைத் தொட்டியுடன் நிற்பதைப் அந்த பெண் பார்த்தார். அதற்கு “குப்பைகளை வீச வந்தேன்” என்று பாண்டியன் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.