COVID-19: சிங்கப்பூரில் சமூக அளவில் இந்திய நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் பாதிப்பு..!

truck-drivers salary increase

சிங்கப்பூரில் நேற்றைய (ஜூன் 22) நிலவரப்படி சமூக அளவில் COVID-19 தொற்று பாதிக்கப்பட்டவர், 33 வயதான இந்திய நாட்டை சேர்ந்த ஊழியர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மேலும் நோய்த்தொற்றுக்கான எந்த ஒரு அறிகுறியும் அவரிடம் காணப்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தன்ஜோங் பகர் மற்றும் ஹாலந்து-புக்கிட் தீமா பகுதிகளில் சிறப்புத் திட்டங்கள்..!

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களுக்கு மேற்கொள்ளப்படும் செயல்திறன் சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்று MOH கூறியுள்ளது.

மீதமுள்ள 217 நோய்த்தொற்று பாதித்த நபர்கள் அனைவரும் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி பெற்றவர்கள் என்று அமைச்சகம் கூடுதலாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் புதிய சம்பவங்களில், சிங்கப்பூரர்களோ, நிரந்தரவாசிகளோ யாரும் இல்லை.

சிங்கப்பூரில் நேற்றைய (ஜூன் 22) நிலவரப்படி, புதிதாக 218 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 42,313ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மற்ற இனத்தை சேர்ந்தவரை தாக்கிப் பேசும் சம்பவம் ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பு – அமைச்சர் சண்முகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg