இந்தியாவின் விஸ்தாரா முதல் பன்னாட்டு விமான சேவை சிங்கப்பூரை இலக்காக கொண்டு தொடங்க இருக்கிறது!

India's Vistara to launch international flights, starting with Singapore in August.

இந்தியாவின் விஸ்தாரா விமான சேவை சர்வதேச அளவில் முதல் முதலில் சிங்கப்பூரை இலக்காக கொண்டு வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது.

இந்தியன் விமான சேவையான விஸ்தாரா தன்னுடைய முதல் சர்வதேச விமான சேவையை ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும், அதை முதன் முதலில் சிங்கப்பூரை இலக்காக கொண்டு தொடங்குவதாக அந்நிறுவனம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது.

தினந்தோறும் இரண்டு விமான சேவைகள் அதாவது ஒன்று இந்திய தலைநகர் டெல்லியில் இருந்தும், மற்றொன்று மும்பையில் இருந்தும் சிங்கப்பூரை வந்தடையும்.

இந்த டெல்லி – சிங்கப்பூர் வழி பயணம் வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதியும், மும்பை – சிங்கப்பூர் பயணம் வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதியும் தொடங்கும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த பன்னாட்டு விமான சேவை காரணமாக தன்னுடைய வியாபாரத்தை இலாப நோக்குடன் கொண்டு செல்ல முடியும், என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக பலதரப்பட்ட விமானங்களில் இந்தியாவை இலக்காகக் கொண்டு பயணிக்க கூடியவர்களின் விமான கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Boeing 737 – 800NG ஆகிய விமானங்கள் பிசினஸ் மற்றும் எகானமி கிளாஸ் இருக்கைகளுடன் இந்த புதிய வழியில் பயணிக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.