சிங்கப்பூர் அருகாமையில் இரண்டு தீவுகளை இணைக்கும் 7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட கடல்வழி பாலம்.!

Indonesia plans to build a 7 km bridge to connect two islands in the Malacca Strait, close to Singapore.

இந்தோனேசியா ஏழு கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு புதிய கடல்வழி பாலத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பாலமானது சிங்கப்பூர் அருகில் உள்ள மலாக்கா ஸ்ட்ரைட் -இல் இரண்டு தீவுகளை இணைக்கிறது.

இந்த திட்டம் தொழிற்துறை மற்றும் சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை ( ஜூலை 11) அன்று தெரிவித்தது.

இந்த பாலம் Batam மற்றும் Bintan ஆகிய தீவுகளை இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு சுமார் $386 மில்லியன் வெள்ளி என்று கேபினெட் செயலாளர் கூறியுள்ளார்.

இது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிக நீளமான பாலம் என்ற அந்தஸ்தை பெறும்.

இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2020ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும், இது முழுமையாக கட்டி முடிக்க மூன்று அல்லது ஐந்து வருடங்கள் ஆகும், என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.