முறையான அறிவிப்பில்லாத பணத்துடன் சிங்கப்பூருக்கு தொடர்ந்து வந்த வெளிநாட்டவருக்கு S$16,000 அபராதம்..!

Indonesian fined for moving S$1.6 million across Singapore borders without declaring it (Photo: AFP/Bay Ismoyo)

இந்தோனேசியாவை சேர்ந்தவர் ஒருவர் பெரிய அளவிலான முறையான அறிவிப்பில்லாத பணத்துடன் சிங்கப்பூருக்கு தொடர்ந்து சூதாட்ட உள்நோக்கத்துடன் வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சிங்கப்பூருக்கு உள்ளேயும், வெளியேயும் கொண்டு வந்த S$1.6 மில்லியன் பணத்தை அறிவிக்காத குற்றச்சாட்டிற்காக அவருக்கு வியாழக்கிழமை நேற்று (டிசம்பர் 12) S$16,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 59 வயதான வார்டோயோ சூரோ விஜோயோ என்ற அந்த நபர், சாங்கி விமான நிலையத்தில் பணம் குறித்த முறையான அறிவிப்பு ஏதும் செய்யவில்லை, போன்ற நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும், அவர் மீது 33 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

வார்டோயோ, ஏப்ரல் 2015 முதல் ஜூன் 2019 வரை சாங்கி விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு பயணங்களில் சுமார் S$21,300 முதல் S$110,000 வரை கொண்டு வந்ததாக நீதிமன்றம் தகவல் கூறியுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அவர் இந்தோனேசியாவிலிருந்து ஒரு விமானத்தில் சிங்கப்பூர் வந்த பின்னர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : CNA