சிங்கப்பூரில் இணையத்தில் பகிரப்பட்ட நாய் துன்புறுத்தும் காணொளி – விசாரணை நடைபெறுகிறது..!

Investigations launched after videos of dog being repeatedly beaten circulate online
Investigations launched after videos of dog being repeatedly beaten circulate online (Videos: Brenda Tan/Facebook)

நாய் துன்புறுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டதை அடுத்து, விலங்கு துப்புறுத்தப்பட்டதா என்று விலங்கு மற்றும் கால்நடை சேவை (AVS) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பகிரப்பட்ட அந்த காணொளியில் காணப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் தேசிய பூங்காக்கள் வாரியம் (NParks) தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேசிய தின அணிவகுப்பு பைகள் விநியோகம் – எங்கு பெற்றுக் கொள்ளலாம்..?

அதாவது இந்த காணொளி, சில ஆண்டுகளுக்கு முன்பு படமாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காணொளிக்கு பிறகு, அந்த நாய் மற்றொரு நபரால் தத்தெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நாய் நல்ல உடல் நிலையில் உள்ளது மற்றும் அதன் தற்போதைய உரிமையாளரால் நன்கு கவனிக்கப்படுகிறது என்று NParks இன் AVS குழு இயக்குனர் திருமதி ஜெசிகா குவோக் கூறியுள்ளார்.

மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்களை அமைதிகாக்க அது கேட்டுக்கொண்டுள்ளது. நாயின் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் அக்கறைக்கு நன்றியையும் அது தெரிவித்துள்ளது.

இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், ஆடவர் அந்த நாயின் கழுத்து மற்றும் தலையை பிடித்துக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. பின்னர் அவர் நாயின் பின்னங்கால்களை பிடித்து ஆட்டுவதை காணமுடிகிறது.

விலங்கு நலப் பாதுகாப்புச் சங்கம் அந்தக் காணொளிகளைத் தனது Facebook பக்கத்தில் பதிவு செய்தது. மேலும், காணொளியில் காணப்பட்ட ஆடவர் மற்றும் நாயின் இருப்பிடம் பற்றிய தகவல்களை கேட்டு கோரிக்கை விடுத்திருந்தது.

URGENT APPEAL: DOG ABUSE———————————————UPDATE: “The dog is in good physical condition and is well taken care of by its…

Posted by SPCA Singapore on Friday, July 17, 2020

இதையும் படிங்க : நோய்த்தொற்றுகளின் இரண்டாம் கட்டத்திற்கு சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg