சிங்கப்பூரில், iPhone 11 வாங்குவதற்காக ஒருநாள் முன்னதாகவே கூடிய iPhone வெறியர்கள்!!

Crowd at Apple Store

iPhone 11 வாங்குவதற்காக ஒருநாள் முன்னதாகவே கூடிய iphone வெறியர்கள், சுமார் 50க்கும் மேற்பட்டோர் iPhone வாங்குவதற்காக Orchard ஆப்பிள் ஷோரூம் முன்பு ஒன்று கூடினர்.

இந்த மாத தொடக்கத்தில் iPhone 11 வெளியிடுவது குறித்து முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது, அன்றிலிருந்து iPhone வெறியர்கள் முதலில் நாம் எப்படியாவது அந்த போனை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றித் திரிந்தனர்.

இன்னிலையில் கடந்த வியாழக்கிழமை செப்டம்பர் 19 iphone வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னரே ஆப்பிள் ஷோரூம் முன்னர் iPhone வெறியர்கள் கியூவில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த கூட்டம் யார் முதலில் போனை வாங்குவது என்ற போட்டியில் கூடியது ஆகும். குறிப்பாக இந்த கூட்டம் காலை 7 மணியிலிருந்து இந்த ஷோரூம் முன் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெயில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடைகளை கொண்டு வந்து சாவகாசமாக அமர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

இங்கே $1149 லிருந்து iPhone 11 கிடைக்கிறது. செப்டம்பர் 20-ல் இருந்து iPhone 11 கிடைக்கும், என்று முன்னறிவிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.