மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மோசடி குறித்து பொதுமக்களுக்கு IRAS எச்சரிக்கை!!

Iras warns public about e-mail and WhatsApp scam

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் (IRAS) இருந்து, பொதுமக்கள் தங்கள் கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை கேட்பதாக வரும் மின்னஞ்சல் ஒரு மோசடி, என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘Inland Revenue Authority of Singapore-Refund-Online-Confirmation’, என்ற மின்னஞ்சல் குறிப்பாக IRAS சின்னத்தைப் பயன்படுத்தி புழக்கத்தில் அதிகம் வருகிறது என்று எச்சரித்துள்ளது. இந்த போலி மின்னஞ்சலை பெறுபவர்களுக்கு $236.51 வரி திரும்பப் பெற உரிமை உண்டு, என்ற போலியான செய்தியுடன் மின்னஞ்சல் வளம் வருகிறது.

கிரெடிட் கார்டு தகவல்கள் குறித்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இந்த மோசடிகள் உங்களை தொடர்கின்றது. இதில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

போலியான மின்னஞ்சல்

இந்நிலையில், எங்களின் முத்திரையுடன் வரும் இதுபோன்ற மின்னஞ்சல் உண்மையானது அல்ல, என்பதை IRAS உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆலோசகர் கூறியதாவது: வாட்ஸ்அப்பில் பரவி வரும் இதுபோன்ற மோசடி படத்தை புறக்கணிக்க வேண்டும் என பொது உறுப்பினர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தயவுசெய்து போலியான மின்னஞ்சலுக்கு பதிலளிக்க வேண்டாம் அல்லது இதுபோன்ற படத்தை பரப்ப வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற போலியான அழைப்புகளைப் பெறும் பொது உறுப்பினர்கள் அவற்றை புறக்கணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொது உறுப்பினர்கள் இது போன்ற மோசடிகள் குறித்த உதவி மற்றும் தகவல்கள் அறிய; www.iras.gov.sg என்ற முகவரியில் சென்று பார்வையிடலாம்.

Iras.gov.sg என்று முடிவடையாத ஒரு மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக போலி என்பதற்கு அதுவே சாட்சி.